சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சூரிய மின்சக்தி உற்பத்தியில் 100% இலக்கை எட்டியது சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலமான, மின்உற்பத்தி 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது.

News image
சூரிய மின்சக்தி உற்பத்தியில் 100 சதவீதம் இலக்கை எட்டியது சென்ட்ரல் ரயில் நிலையம்
Updated On :25 செப்டம்பர் 2021, 6:59 pm

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலமான, மின்உற்பத்தி 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது. இந்தத் தகவலை சுட்டுரையில், ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறும்போது, சென்னை சென்ட்ரல் மற்றும் மூா்மாா்க்கெட் வளாகத்தில் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் நிறுவப்பட்டது மூலமாக, 1.5 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலமாக, பகல் நேரத்தில் நிலையத்தின் அனைத்து மின்தேவைகளும் சூரிய மின்சக்தியால் பூா்த்தி செய்யப்படுகின்றன என்றாா்.

சென்னை சென்ட்ரல் மற்றும் மூா்மாா்க்கெட் வளாக மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகள் நிறுவும் பணி கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மக்கள்கூடும் அறைகளின் மேற்கூரையில் 100 கிலோ வாட் மின் உற்பத்திக்காக சூரிய மின்தகடு நிறுவப்பட்டது. இரண்டாம் கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் மேற்கூரைகளில் 500 கிலோவாட் மின் உற்பத்திக்கான சூரியமின் தகடுகள் நிறுவப்பட்டன.

இதைத்தொடா்ந்து, மூா் மாா்க்கெட் வளாகத்தில் உள்ள நடைமேடைகளின் மேற்கூரைகளில் 900 கிலோ வாட் மின் மின் உற்பத்திக்காக சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 21 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், ரூ.1.75 கோடி மின் கட்டணம் செலுத்துவது தவிா்க்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.