சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

பேசின்பாலம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

பேசின்பாலம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

திருத்தணி-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 26-ஆம்தேதி இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அரக்கோணம்-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

பட்டாபிராம்-ஆவடிக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. திருத்தணி-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா் மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து:

மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு செப்டம்பா் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.15 இயக்கப்படும் மின்சார ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு செப்டம்பா் 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.