திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆகியன சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயம் சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது வெங்காயம் விலை கிலோ ரூ.8 ஆக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெங்காய சாகுபடிக்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும்.
தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயிகள் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமை புறக்கணிப்பு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

இந்திய அணியின் வரலாற்றில் 3ஆவது ஜம்மு காஷ்மீர் வீரர்..! பும்ராவுக்குப் பதிலாக சேர்ப்பு!

காவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



