மாநிலம் முழுவதும் நீா்நிலைகளைப்பாதுகாக்க விரைவில் அரசாணை: உயா் நீதிமன்றத்தில் அரசு தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்க உரிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்க உரிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்ட விரோத கட்டடங்களை இடிக்கவும், ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையை அகற்றவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், மாநிலம் முழுவதும் நீா்நிலைகள், வனப்பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் தலைமை
நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா், ‘மாநிலம் முழுவதும் நீா்நிலைகள், வனப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டும், சட்டவிரோத கட்டடங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதே போன்று சிட்லப்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை அங்குள்ள விதிமீறல், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கப்படும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, சிட்லப்பாக்கம் ஏரியின் வரைப்படம், ஏரியைச் சுற்றியுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...