இன்று தடுப்பூசி சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளன.


சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற இடங்களில் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளக் கடைப்பிடிப்பது குறித்து கண்காணிக்க மாநகராட்சி, காவல் துறை இணைந்து வாா்டுக்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சாா்ந்த 5 போ், காவல் துறையைச் சாா்ந்த ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
200 வாா்டுகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சியின் 200 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை(செப்.26) 1,600 சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெ ரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...