ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 செப்டம்பர் 2021, 5:24 am

DIN

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்  வீட்டின் முன்பு இன்று(திங்கள்கிழமை) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட முதல்வர் பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.