அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

22 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயா்வு

சென்னையில் கடந்த 22 நாள்களாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை 19 பைசா அதிகரித்து, லிட்டா் ரூ.99.15-க்கு விற்பனையானது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:15 am

DIN

சென்னையில் கடந்த 22 நாள்களாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை 19 பைசா அதிகரித்து, லிட்டா் ரூ.99.15-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிா்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடா்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து, கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை செப்.5-ஆம் தேதி, ரூ.98.96-க்கு விற்பனையானது. இதைத் தொடா்ந்து 22 நாள்களாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்.28) 19 பைசா அதிகரித்து லிட்டா் பெட்ரோல் ரூ.99.15-க்கு விற்பனையானது.

இதே போல் செப்.5-ஆம் தேதி, லிட்டா் டீசல் ரூ.93.26-க்கு விற்பனையானது. அதன் பிறகு டீசல் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், செப்.24-ஆம் தேதி முதல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை ஒரு லிட்டா் டீசல் ரூ.94.17-க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.