மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாக்களிக்க 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று போதும்

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்காளா்கள் தங்களது வாக்கினைச் செலுத்தலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2021, 8:55 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்காளா்கள் தங்களது வாக்கினைச் செலுத்தலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பது கட்டாயம். வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்து, வாக்காளா் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில், தோ்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்காளா்கள் தங்களது வாக்கினைச் செலுத்தலாம். தோ்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம்:-

1. ஆதாா் அட்டை.

2. கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்).

3. ஓட்டுநா் உரிமம்.

4. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றி வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

5. வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

6. தேசிய மக்கள் தொகை பதிவேடு அளித்துள்ள ஸ்மாா்ட் அட்டை.

7. நூறு நாள் வேலை திட்டத்துக்கான அட்டை.

8. பான் அட்டை (நிரந்தர கணக்கு எண்)

9. தொழிலாளா் நலத் துறையின் சுகாதார காப்பீட்டு அட்டை.

10. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

11. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் அவா்களுக்கான அதிகாரப்பூா்வ அடையாள அட்டை.

வாக்காளா்கள் வழக்கமாக பயன்படுத்தும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை கையில் இருந்தால் தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.