தஞ்சாவூர்: மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைக் கைவிடக் கோரி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாஜகவினர்.
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை அக்கட்சியின் தமிழக இணைப்பு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் இருந்து கடத்தி வந்த மினி லாரி வாழப்பாடி அருகே பறிமுதல்
போராட்டத்துக்கு மாட்டு வண்டியில் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்.
இப்போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியத் செயலர் எச். ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.