கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், தற்போது கரோனா அதிகமாகப் பரவி வருவதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள
கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்
கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்


சென்னை: தமிழகத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், தற்போது கரோனா அதிகமாகப் பரவி வருவதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறார்கள். இதன் காரணமாகவே கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. எனினும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. மற்ற மாவட்டங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னமும் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி போடவேண்டியுள்ளது என்றும் கூறினார்.

மேலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்து, மத்திய அரசிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, புதிதாக 1,896 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 225 பேருக்கும், சென்னையில் 216 பேருக்கும், ஈரோட்டில் 179 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,842 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 23 போ் பலியாகினா் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com