
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த சென்ற மத்திய கண்காணிப்பு துணைக்குழு பொறியாளர்கள்.
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் மழைக்காலங்களில் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் அணையின் பராமரிப்பு ஆகியவற்றை பார்வையிட செவ்வாய்க்கிழமை மத்திய தலைமை கண்காணிப்பு துணைக்குழு தலைவரும் நீர்வள செயற்பொறியாளருமான சரவண குமார் தலைமையில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர்.
பிரதான அணை, பேபி டேம், நீர் வழிப்போக்கிகள், கேலரி ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார் உதவி கோட்ட பொறியாளர் பிரசீத் கலந்து கொண்டனர்.