சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..

சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நாள்தோறும் கரோனா பாதிப்பு 200க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் அது தற்போது குறைந்து வருகிறது.
சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..
சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..


சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நாள்தோறும் கரோனா பாதிப்பு 200க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் அது தற்போது குறைந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில், பெரிய அளவில் கோயில் திருவிழாக்கள் நடைபெறாமல், கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரிக்காமல்  தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டதால் ஆகஸ்ட் 18 வரை சென்னையில் நாள்தோறும் 200க்கும் குறைவான கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவலின் அடிப்படையில், சென்னையில் தற்போது 1,020 தெருக்களில் மட்டுமே கரோனா நோயாளிகள் உள்ளனர். அதிலும் 850 தெருக்களில் 3க்கும் குறைவானோர் உள்ளனர். 92 தெருக்களில் மட்டுமே 4 அல்லது அதற்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். 39 தெருக்களில்தான் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கிறார்கள். தேனாம்பேட்டை தான் அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட தெருக்கள் உள்ளன. அங்கு மட்டும் 115 தெருக்கள் கரோனா பாதித்தோர் இருக்கும் தெருக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக புதிதாக கரோனா பாதிப்பு மற்றும் கரோனா நோயாளிகள் குறைந்து வந்தாலும், மருத்துவ நிபுணர்களின் கூற்று வேறுமாதிரியாக உள்ளது. சென்னை மக்கள் தற்போதுதான் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள். அதற்குக் காரணம், இன்று முதல் நடைமுறைக்கு வரும் சில தளர்வுகள்தான். திரையரங்குகள், பூங்காங்கள், கடற்கரைகள் திறப்பது ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்பதை உணரும் தருணமாகவும் இருக்கிறது.

இளம் நடிகை ஐஸ்வர்யா போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை மாநகர சுகாதாரத் துறை உதவி ஆணையர் டாக்டர் மணீஷ் நர்னவாரே கூறுகையில், சென்னையில் பல பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கடுமையாகப் பின்பற்றுவதில்லை. அது மிகப்பெரிய கவலையை அளிக்கிறது என்கிறார்.

சென்னையில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 200 பேர் வரை பங்கேற்கிறார்கள். அதுபோலவே சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்கள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரு வேளை, மீண்டும் சென்னையில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கினால், அரசுக்கு வேறுவழியே இல்லை, மக்களின் நலன் கருதி மீண்டும் கடுமையான ஊரடங்கைப் பிறப்பிக்க வேண்டியது இருக்கும். 

கடந்த கால அனுபவங்களை நினைவில் கொண்டு மக்கள்தான் கடுமையான எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். திரையரங்குகள், கரோனா தொற்றுப் பரவ மிக எளிதான இடமாக இருக்கும் என்பதால் மக்கள்தான் விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்று பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி கூறியுள்ளார்.

மாநிலத்தில் 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்வரை, மக்கள் எப்போதுமே கரோனா பற்றி அலட்சியமாக இருக்க முடியாது. திரையரங்குகள் கதவுகளை திறந்து வைத்து, காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

382வது சென்னை தினம் - புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட உள்ளதால், இனிதான் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளும், மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com