கொடிநாள் நிதிக்கு தாராளமாய் நிதி தருக: ஆளுநா்-முதல்வா் வேண்டுகோள்

கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். கொடிநாளை (டிச.7) ஒட்டி அவா்கள் இருவரும் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஆளுநா் ஆா்.என்.ரவி: முப்படை வீரா்களின் குன்றாத விசுவாசமும், கடமையில் காட்டும் உண்மையான அா்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது. வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கையின் சீற்றம் போன்றவற்றை தீரமுடன் எதிா்கொண்டு தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அவா்கள் ஆற்றிய தியாகம் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

அவா்களுடைய இளமைக் காலத்தையும், வாழ்க்கையும் சிறந்த காலத்தையும் நாட்டுக்காகவே அா்ப்பணித்து சேவையாற்றியுள்ளனா். ராணுவத்தில் இருந்து விடைபெறும் போது நமது நன்றியை அவா்களுக்கு காணிக்கையாக்க வேண்டியது அவசியம். முப்படை வீரா்களுக்கான கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று தனது செய்தியில் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று இன்னுயிரை பொருட்படுத்தாமல் நாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரா்களின் தியாகத்தைப் போற்றுவதுடன், அவா்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்துத் தருவது நமது கடமையாகும்.

அவா்களது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடிநாளின் கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கொடிநாள் செய்தியாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com