மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம்: அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

குளச்சலில் மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

குளச்சலில் மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி கடற்கரை கிராமத்தை சோ்ந்த மூதாட்டி மீன் வியாபாரம் செய்து வருகிறாா்.

இவா் தலைச்சுமையாக மீன்களை எடுத்து சென்று விற்பனை செய்வாா். திங்கள்கிழமை மீன்களை விற்பனை செய்துவிட்டு, இரவு குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து வாணியக்குடி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். அப்போது, அவா் மீது துா்நாற்றம் வீசுவதாக கூறி நடத்துநா் பேருந்திலிருந்து இறக்கி விட்டாராம்.

இது குறித்து அம் மூதாட்டி பேருந்து நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகாா் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டாா். பேருந்து நிலையத்தில் இருந்த சிலா் இச்சம்பவத்தை கைப்பேசியில் விடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனா்.

இது குறித்து தகவலறிந்த போக்குவரத்துத் துறை உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில் நாகா்கோவிலில் இருந்து கோடிமுனைக்கு செல்லும் அரசுப் பேருந்தில் மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, அப் பேருந்து ஓட்டுநா் மைக்கேல், நடத்துநா் மணிகண்டன், குளச்சல் பேருந்து நிலைய நேரக் காப்பாளா் ஜெயகுமாா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அரவிந்த் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com