
சென்னை: 45வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 6ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், புத்தக காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
45வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.
மேலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். வேலை நாள்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
45வது புத்தக காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புத்தகக் காட்சிக்குள் நுழைய மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழக்கம் போல ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் பபாசி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.