ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழகத்தில் மேலும் 649 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தமிழகத்தில் மேலும் 649 பேருக்கு கரோனா
Updated On :14 டிசம்பர் 2021, 2:53 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 657 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,03,889 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,633-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 695 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,92,451-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 123 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.