
கோப்புப்படம்
புதுக்கோட்டை: பொன்னமராவதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இன்ஸ்டாகிராமில் சிறுமிகளின் புகைப்படங்களை பாலியல் நோக்கில் நண்பர்களுக்கு பகிர்ந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இளைஞரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அவமானம் தாங்காமல் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிணி தீர்க்கும் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...