ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே 4முறை காலையில் நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
நிலஅதிர்வு ஏற்படக் காரணம் என்ன என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், நிலஅதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
இதையும் படிக்க- பாஜக நிதி திரட்டும் திட்டம்: ரூ.1,000 வழங்கிய பிரதமர் மோடி
நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நவ.29 மற்றும் டிச.23ஆம் தேதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.