திமுக பிரமுகர்கள் தொல்லை: தற்கொலை ஆடியோ வெளியிட்ட எஸ்.ஐ.

திமுக பிரமுகர்கள் வழக்குப்பதிவு விவகாரங்களில் தலையிட்டு பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாக வேப்பங்குப்பம் காவல் உதவி
திமுக பிரமுகர்கள் தொல்லை: தற்கொலை ஆடியோ வெளியிட்ட எஸ்.ஐ
திமுக பிரமுகர்கள் தொல்லை: தற்கொலை ஆடியோ வெளியிட்ட எஸ்.ஐ

திமுக பிரமுகர்கள் வழக்குப்பதிவு விவகாரங்களில் தலையிட்டு பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாக வேப்பங்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கட்செவி அஞ்சலில் இரு ஆடியோக்கள் வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆடியோக்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சீனிவாசன். இவர் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் காவலர்களின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) குழுவில் இரு ஆடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு ஆடியோவில் திமுக பிரமுகர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டிருந்த அவர், அவர்கள் பணிசெய்ய விடாமல் தடுத்து தொல்லைக் கொடுப்பதால் தற்கொலைச் செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகவும், மணல் திருடுகின்றனர், ஃபோன் செய்து திட்டுகிறார்கள், மனஉளைச்சல் அதிகமாகிவிட்டது. எனக்கு சேர வேண்டிய பணத்தை அரசிடம் இருந்து பெற்று மனைவி, குழந்தைகளிடம் அளித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

மற்றொரு ஆடியோவில், 8 மணிக்கு பணி என்றால் காவலர்கள் யாருமே காவல் நிலையத்துக்கு வருவதில்லை. 11 மணிக்குதான் வருகின்றனர். சாராய வியாபாரி, சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுவோரிடம் பேசுகின்றனர். சைபர் க்ரைம் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்விரு ஆடியோக்களைக் கேட்ட காவலர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவற்றை உடனடியாக உயரதிகாரிகளின் கவனத்துக்கும் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, வேலூர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனை புதன்கிழமை காலை விசாரணைக்காக அழைத்திருந்தார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணனும் அவரிடம் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளிடம் கேட்டபோது, வேப்பங்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் பதிவிட்டிருந்த ஆடியோக்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com