56 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
56 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி
56 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. பத்மநாபன்; ஐந்தாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மூ. தமிழ்வாணன்; சென்னை பெருநகரக் காவல், காவல் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. உமாராணி; ஆயுதப்படை, ‘ஊ’ நிறுமம், 31 ஆம் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இ. அந்தோணிசாமி; கோயம்புத்தூர் மாநகரம், பஜார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. பாலசுப்பிரமணி; கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி. பால் அலெக்சாண்டர்; கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இரா. விநாயகம்; சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வை. திலீப்குமார்; ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. செல்வராஜ்; நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. ஜூலியன் குமார்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜ்குமார்; உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த ரதி; காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி. குணசேகரன்; கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெ. பழனிவாசன்; கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கி. பாலசுப்பிரமணியன்; மதுரை மாநகரம், அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த கே. முத்துப்பாண்டி;

மதுரை இரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜி. ரமேஷ்பிரபு; நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வீ. வாழ்வேந்திரன்; இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த இரா. அழகுமலை; பார்த்திபனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சா. புனிதன்; சேலம் மாநகரம், செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மா. காளியப்பன்; மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ். சுந்தர்; அழகாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செ. வடிவேல்;

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்களம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ். மருதுசெல்வம்; கீழசெவல்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான் ஜேசுகனி; காரைக்குடி நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த காளிமுத்து; திருச்சிராப்பள்ளி மாநகரம், கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி. சேகரன்; கே.கே. நகர் காவல் நிலையக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி. முருகேசு; திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம். ஷேக் முகமது; 

திருநெல்வேலி மாநகரம், மோப்பநாய் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த என். இப்ராஹிம்; குழந்தை கடத்தல் எதிர்ப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. அகமது அலி; திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இரா. ஸ்ரீதரன்; தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.டி. பிள்ளைமுத்து; முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப்பி. இராமச்சந்திரன்; விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. முத்துலெட்சுமி; கயத்தாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இ. தங்கராஜ்; திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ். கணபதி; தட்டப்பாறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். நாராயணசுவாமி;

திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி கங்காதேவி; கனியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வே. செல்வராஜ்; திருவாரூர் மாவட்டம், ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே. கண்ணன்; திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப்பி. வடிவேலன்; ஆரணி போக்குவரத்து நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ். சிவக்குமார்; கீழ்ப்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. அழகேசன்; தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப்பி. முருகன்; களம்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வி. குப்பன்;

விழுப்புரம் மாவட்டம், ‘க்யூ’ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஏ. ராஜேந்திரன்; ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த அ. பிரவீஷ் மற்றும் ரா. மனோ; இரண்டாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த த. செல்வம்; கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சே. ராஜசேகர்; திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த அ. அருள் ஆனந்து;

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சந்திரசேகர்; நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இரா. செல்வராஜ்; சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த ம. பிரகலாதன்; விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். ஏ. முகமது அமானுல்லா; ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com