
மதுரையில் பிப். 18-ல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் உரையாற்றும் தா. பாண்டியன் (கோப்புப் படம்).
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.26) காலமானார். அவருக்கு வயது 88.
சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இதையும் படிக்கலாமே.. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆகச் சிறந்த பேச்சாளரான தா. பாண்டியன்
சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாமே.. 'சாகும்வரை பேச்சினால் மக்களைத் தட்டி எழுப்புவேன்': மதுரையில் தா.பாண்டியனின் உருக்கமான கடைசிப் பேச்சு
செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (பிப்.25) காலை தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...