
ஆ.செல்லக்குமார் (கோப்புப் படம்)
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் ஆ.செல்லக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதன் பிறகு அவர் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார்.
படிக்க: மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை எப்போது?
சென்னையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.