மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை எப்போது?: அரசு விளக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அருகிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர். எய்ம்ஸ் நிர்வாகத்தில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2 நாள்களில் தமிழக அரசின் மதில் மனுவை மத்திய அரசுக்கு வழங்கவும், அது பற்றி மத்திய அரசு பதிகளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம்?:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து 2019-இல் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, மத்திய அரசு, ஜப்பான் பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில், மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கா் நிலம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாகி ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை வெறும் சுற்றுச்சுவா் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இதேகாலகட்டத்தில் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com