மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கரோனா நோய்த் தொற்று நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அதிகளவு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. 11 மாவட்டங்களில் குறைந்த தளா்வுகளுக்கே அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவையைத் தொடங்குவது குறித்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கோரிக்கை உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கரோனா நோய்த் தொற்று நிலவரம் போன்றவை குறித்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக முதல்வா் கலந்துரையாடி வருகிறாா். இந்த ஆலோசனைக்குப் பிறகு, பொதுப் போக்குவரத்து சேவை போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com