திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்க்கீஸ் பொறுப்பேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் 22 ஆவது ஆட்சியராக ஆல்பி ஜான் வர்க்கீஸ் பதிவு ஆவணங்களில் கையெழுத்திட்டு புதன்கிழமை காலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 இதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மாநில நகராட்சி நிர்வாகங்களின் ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவு துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஆல்பி ஜான் வர்க்கீஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ஆல்பி ஜான் வர்க்கீஸ், புதன்கிழமை காலை 6.45 மணிக்கு பதிவு ஆவணத்தில் கையெழுத்திட்டு திருவள்ளூர் மாவட்டத்தின் 22-ஆவது ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக காலையில் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய ஆட்சியரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை பிரிவு அதிகாரிகளும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com