காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம். ஆர்த்தி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம்.ஆர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம்.ஆர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் எம். ஆர்த்தி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இன்று காலை அவர் காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தினை பூர்வீகமாகக் கொண்டவர். பல் மருத்துவம் படித்த இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில்  சேர்ந்தவர்.

புதிய ஆட்சியராகப்  பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் எம். ஆர்த்தி கூறுகையில், மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று குறைந்திருந்தாலும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக முழுமையான கவனம் செலுத்தப்படும். இது ஒரு சவாலாக இருக்கிறது. கரோனா நோயை ஒழிக்க தடுப்பூசி தான் ஒரு சிறந்த ஆயுதம். எனவே, மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை என்னிடம் நேரில் சொல்லலாம். நான் எந்நேரமும் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறேன். அதிகாரிகளும் மக்களும் இணைந்து வளர்ச்சிப் பணிகளை அதிகமாக செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒரு சிறந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com