
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ. 127 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவல்,, ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
இதையடுத்து திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகளில் ரூ. 165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ரூ. 127 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
அதிகபட்சமாக நேற்று மதுரையில் ரூ. 37.28 கோடிக்கும் அதன் தொடர்ச்சியாக சென்னை - ரூ. 33.41 கோடி, சேலம் -ரூ. 28.76 கோடி, திருச்சி- ரூ. 27.64 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.
இதனால் இரு தினங்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ. 292 கோடிக்கு நடைபெற்றுள்ளது.