பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

News image
புதுதில்லிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்.
Updated On :17 ஜூன் 2021, 10:24 am

DIN


இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனி விமானத்தில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு தில்லி சென்றடைந்தார் மு.க.ஸ்டாலின்.

தில்லி வந்த முதல்வர் முக.க.ஸ்டாலினுக்கு தில்லி விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தில்லி சிறப்பு பிரநிதி விஜயன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் தில்லி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் மற்றும்  திமுக கட்சி அலுவலகத்தையும் பார்வையிடுகிறார். பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறாா்.

Story image

தில்லி வந்த முதல்வர் முக.க.ஸ்டாலினுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இந்தச் சந்திப்பின் போது நதிநீா் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, நீட் தேர்வு ரத்து,  ஹைட்ரோ கார்பன் திட்டம்,  7 பேர் விடுதலை, போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் அளிக்கிறாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சரை சந்தித்து தமிழகத்தின் சாா்பிலான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளாா்.

அரசு ரீதியான சந்திப்புகளுக்குப் பிறகு, அரசியல் தொடா்பான சந்திப்புகளை மேற்கொள்கிறாா். 

Story image

தில்லி வந்த முதல்வர் முக.க.ஸ்டாலினுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

அப்போது காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுகிறார். தொடா்ந்து வெள்ளிக்கிழமை அவா் தமிழகம் திரும்புகிறாா்.

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் தில்லி சென்றுள்ளனர். 
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.