உதயநிதி வெற்றி; சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக

சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
உதயநிதி வெற்றி; சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக
உதயநிதி வெற்றி; சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக


சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் துறைமுகம் தொகுதியைத் தவிர 15 தொகுதிகளிலும் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,302 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி. கஸ்ஸாலி 17,062 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் திமுக வெற்றி பெற்றுவிட்டது. ஒரு தொகுதியைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

1. ஆர்.கே. நகரில் திமுக வேட்பளார் ஜே.ஜே.எபினேசர்,
2. பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர்,
3. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,
4. வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் அ. வெற்றிஅழகன்
5. திருவிக நகரில் திமுக வேட்பாளர் தாயகம் கவி,
6. எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இ. பரந்தாமன்
7. ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா. மூர்த்தி,
8. தியாகராயநகர் தொகுதியில்  திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதியும் 
9. ஆயிரம் விளக்கு - திமுக வேட்பாளர் எழிலன்,
10. மயிலாப்பூரில் த. வேலு,
11. சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்ரமணியமும்,
12. விருகம்பாக்கத்தில் திமுக வேட்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவும்
13. அண்ணாநகரில் திமுக வேட்பாளர் எம்.கே. மோகனும்,
14. வேளச்சேரியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.எம்.எச். ஹஸனும் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை திமுகவின் கோட்டையாக இருந்த துறைமுகம் தொகுதியில் 12.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபு பின்னடைவை சந்தித்துள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் முன்னிலையில் உள்ளார்.

தற்போது நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்த நிலவரம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com