

தமிழகத்தில் கோவையில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கோவையில் அதிகரித்து வருகிறது.
கோவையில் நேற்று 119 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று (நவ.1) 20 பேர் உயிரிழந்த நிலையில், கோவையில் மட்டும் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் நேற்று 114 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டிருந்த நிலையில், இன்று 111 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 85, ஈரோடு 73, திருப்பூர் 66, சேலம் 57, நாமக்கல் 42, தஞ்சாவூர் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.