வடகிழக்கு பருவமழை: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?


வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசரக் கட்டுப்பாட்டு மையம் - எண்கள்:

கனமழை காரணமாக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணலாம்.

  • சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.
  • பொதுமக்கள் அரசு இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • தமிழக முதல்வர் ஆணையின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 14754.63 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 83,319 மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களது பங்களிப்பை உறுதிசெய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர் ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • முதல் நிலை மீட்பாளர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
  • பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com