டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்:  அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி.
மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.
மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி.

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை தமிழக முதல்வர் அமைத்தார். இக்குழுவில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, அர. சக்கரபாணி, சிவ.வீ. மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இக்குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அண்டமி கிராமத்தில் மழை நீரால் நெற் பயிர்கள் மூழ்கியுள்ள வயல்களை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.

அப்போது செய்தியாளரிடம் அமைச்சர் பெரியசாமி தெரிவித்தது:
மதுக்கூர் வட்டாரத்தில் 48 கிராமங்களில் 3,700 ஹெக்டேர் வயல்கள் பலத்த மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் எல்லாம் அழுகத் தொடங்கியுள்ளன. இவற்றை வேளாண் துறை மூலம் உயிர்ப்பிக்க வைப்பதற்காக உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

அண்டமி கிராமத்தில் மழை நீரால் மூழ்கியுள்ள நெற் பயிர் வயல்களை பார்வையிடும் அமைச்சர்கள் குழுவினர்.

பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசுக் கேட்டுள்ளது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமையும் பயிர் காப்பீடு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் ஐ. பெரியசாமி.

அனைத்து பகுதியிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவது தொடர்பான அறிக்கை விரைவில் அரசிடம் அளிக்க உள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு செய்ய இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com