கனமழை: புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு 

மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர் பகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சேத விவரங்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சேத விவரங்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

சீர்காழி:  மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர் பகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை கடந்த 28 ஆம் தேதி இரவு முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. 

இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கியது. 

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 

கடந்த இரு தினங்களாக மழை ஓரளவுக்கு இல்லாததால் வயல்கள் சூழ்ந்த மழைநீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழக முதல்வரை வரவேற்றனர். 

புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதன் பின்னர் கொள்ளிடம் அடுத்த புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு வேளாண்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மழையால் பாதித்த  நெற்பயிர்கள் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். சேத விவரங்கள் குறித்து விவசாயிட ம் கேட்டறிந்தார்.

அப்போது அவருடன் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யனாதன் , அன்பில் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

முதல்வரின் வருகையை ஒட்டி கொள்ளிடம் பாலத்தில் தஞ்சை சரக டிஐஜி பிரகாஷ் குமார் தலைமையில் எஸ்பி சுகுணா சிங் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com