மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு: நீரேற்று நிலையத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்தது

மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைந்ததால் தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது.
மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு
மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு
Published on
Updated on
1 min read


மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைந்ததால் தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது.

மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வந்தது. இந்த நீரை தேக்கி விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் ரூ.525 கோடி செலவில் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக நீரேற்று நிலையம் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியிலுள்ள திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நீர்தேக்கத்திற்கு இயற்கை அரணாக இருந்த சில குன்றுகள் சேதப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், பணிகள் நிறைவடையாமல் அதிமுக ஆட்சியில் அவசரகதியில் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறி எம் காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டது. தொடக்க விழாவிற்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

நீரேற்று நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டு இருந்த மண் கரை நேற்று திடீரென உடைந்தது.

தற்பொழுது மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 5-ஆவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், நீரேற்று நிலையத்திற்கு முன்பாக மண் கரை அமைக்கப்பட்டு இருந்த மண் கரை நேற்று திடீரென உடைந்தது. தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது. 

அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உயர்த்தினால் தண்ணீர் நீரேற்று நிலையத்திற்கு உள்ளே போகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அணையின் நீர்மட்டத்தை 124 அடியாக உயர்த்தும்போது அருகில் உள்ள கிராமங்களுக்கும் தண்ணீர் புகுந்து விடுமோ என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com