நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயா்நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

அப்போது, நீலகிரியில் யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அகற்றவும் மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

2017 ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராகப் பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யும் சூழல் நிலவியபோது, அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று இந்த வழக்கில் முறையிடப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம், இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com