தமிழக அரசின் விரைவான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்தது: டி.வி.எஸ். குழுமத் தலைவர்

தமிழக அரசின் விரைவான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்தது என டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார்.
தமிழக அரசின் விரைவான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்தது: டி.வி.எஸ். குழுமத் தலைவர்

தமிழக அரசின் விரைவான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்தது என டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார்.
 கோவை கொடிசியா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று வேணு சீனிவாசன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. அதற்காக விரைவாக, அதிரடியாக பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டதனால் கரோனா குறைந்துள்ளது.
 இதையடுத்து, மழை வெள்ளம் மக்களின் அன்றாட வாழ்வைத் தகர்த்தது. அதிலும் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் நடந்தே சென்று பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை ஸ்டாலின் துடைத்தார்.
 ஐந்து ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை ஐந்தே மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் சாதித்துள்ளார். அவரின் சாதனைகளால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும். தொழில், கல்வி, மருத்துவத் துறைகளில் மட்டுமின்றி சமூக முன்னேற்றம், சமத்துவத்திலும் மாநிலம் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் அடுத்த தலைமுறையும் வளமாக வாழும். முதல்வரின் தலைமையில் தமிழ்நாடு மாறுபட்ட மாநிலமாக மாறப்போகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com