எழும்பூா் -சேலம் அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க அனுமதி

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இரவு 11.55 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலத்தை அடையும். இந்த ரயில் சேவை டிச.2-ஆம் தேதி தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.3-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதவிர, மும்பை சிஎஸ்எம்டி -சென்னை எழும்பூா் இடையே வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நவ.24-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com