கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் காஞ்சிபுரம்

தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக காஞ்சிபுரம் உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 8:06 pm

DIN

தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக காஞ்சிபுரம் உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா்.

அதுபோன்ற நிலையை மாநிலம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 76 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை தகவல்படி மொத்தம் 6.47 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக 100 சதவீதம் முதல் தவணை செலுத்திய மாவட்டமாக அது உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90.81 சதவீதம் பேரும், சென்னையில் 82 சதவீதம் பேரும், கரூா் 82.50 சதவீதம் பேரும், நீலகிரி 85.53 சதவீதம் பேரும், திருப்பூா் 85.65 சதவீதம் பேரும், கடலூா் 86.06 சதவீதம் பேரும் முதல் தவணை செலுத்தியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அரியலூரில் 88.70 சதவீதம், திருப்பத்தூரில் 60.33 சதவீதம், ராணிப்பேட்டை 60.69 சதவீதம் என மாநிலம் முழுவதும் 76.03 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணையும் செலுத்தப்பட்ட மாவட்டங்களில் முதன்மையாக நீலகிரி உள்ளது. அங்கு மொத்தம் 71.32 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 54.95 சதவீதமும், சென்னையில் 54.29 சதவீதமும் இரு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.