இங்கெல்லாம் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, அக்டோபர் 5ஆம் தேதி மாலை 3 மணிமுதல் 6 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com