யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உள்ளாட்சித் தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :12 அக்டோபர் 2021, 3:49 pm

DIN

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல இடங்களில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.