கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகத்தில் ஆறாவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் செலுத்துவதற்கு 66 லட்சம் தடுப்பூசிகள் அரசு கையிருப்பில் உள்ளன.
கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகத்தில் ஆறாவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் செலுத்துவதற்கு 66 லட்சம் தடுப்பூசிகள் அரசு கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது அலை அச்சுறுத்தல் மற்றும் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் மக்கள் நலன் கருதி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று  தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 57 லட்சம் பேருக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3-ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10-ஆம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஆறாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com