எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை  இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடக்கிறது.

News image

அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்

Updated On :28 ஜனவரி 2024, 9:56 am IST

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை  இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடக்கிறது.

சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,761 ஆகும். 

இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.ஸ்ரீராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,761. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளா் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகராக பணமும் கிடைக்கும். 

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவா்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் காா்ட் கட்டாயம். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.