பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேவர் குருபூஜை: சசிகலா பசும்பொன் செல்ல அனுமதி

பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 அக்டோபர் 2021, 3:09 pm

DIN

பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக, வியாழக்கிழமை இரவு சசிகலா மதுரை வருகிறாா். 

இங்கு அழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கும் அவா், கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கும், தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு காலை 8 மணிக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறாா். 

அதன் பின்னா், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் அவா், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் காலை 10.30 மணிக்கு மரியாதை செலுத்த உள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.