திருமண உதவித் தொகை: ஆண்களுக்கு ரூ.3,000; பெண்களுக்கு ரூ.5,000 அறிவிப்பு

தமிழகத்தில் கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மாணவர்களின் பொழுதை பயனுள்ளதாக்கும் வகையில், ரூ.2.59 கோடி மதிப்பில் 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறுபான்மையினருக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்தார். 

அப்போது பேசிய அவர், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ. 5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும் எனக் கூறினார். 

நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கான திருமண உதவித் தொகை உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். 

இதில் ஆண்களுக்கான உதவித் தொகை ரூ.3 ஆயிரமாகவும், பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 5 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், 

கல்வி உதவித் தொகை திட்டத்தில் முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல்முறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com