பேருந்து பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்துத் துறை

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021 வரை மிகவும் குறைந்துள்ளது  என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பேருந்து பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்துத் துறை

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021 வரை மிகவும் குறைந்துள்ளது  என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு இன்று (செப்.8) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2011 முதல் 2012-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2.08 கோடியாக இருந்தது  என்றும்,

2020 முதல் 2021-ல் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 73.64 லட்சமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை குறைக்க ஓட்டுநர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தின்றி பணிபுரியும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களை ஊக்குவிக்க முதல்வர் விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாள்தோறும் 34 லட்சம் பெண்கள் பயணம்:

அரசுப் பேருந்துகளில் இலவச பயணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 34 லட்சம் பெண் பயணிகள் பயன்பெற்றுள்ளனர்.

அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பெண்கள் பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுகவின் நத்தம் விஸ்வநாதக் கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com