தடுப்பூசியும் இல்லை; பரிசும் இல்லை: ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்

 நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கரோனா தடுப்பூசி முகாம்களில் பெரும்பாலான இடங்களில் போதிய அளவு மருந்து இல்லாததால் மக்கள் திரும்பிச் சென்றனர். 
ஆதனூர் ஊராட்சியில் தடுப்பூசி மருந்து இல்லாமல் காத்து நின்ற மக்கள்
ஆதனூர் ஊராட்சியில் தடுப்பூசி மருந்து இல்லாமல் காத்து நின்ற மக்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று (செப்.12) ஏற்பாடு செய்யப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம்களில் பெரும்பாலான இடங்களில் போதிய அளவு மருந்து இல்லாததால் டோக்கன் பதிவு செய்து காத்திருந்த மக்கள் திரும்பிச் சென்றனர்.

முகாம்கள் முழுமையடையாததால் ஊராட்சிகள் தோறும் அறிவிக்கப்பட்ட பரிசுப்பொருள்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக தாணிக்கோட்டகம் ஊராட்சியில் முகாமுக்கு வந்த 600 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் 180 பேருக்கு மட்டுமே ஊசி மருந்து இருந்தது.

ஆதனூர் ஊராட்சியில் 280 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், 67 பேருக்கு மட்டுமே ஊசி மருந்து வழங்கப்பட்டது. இதேபோல, பல ஊர்களில் மருந்து இல்லாமல் திரும்பினர்.

மெகா தடுப்பூசி முகாமுக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கவும் அறிவிக்கப்பட்டிருந்தன. முகாம்கள் முழுமையடையாததால் பரிசுப் பொருள்களும் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வீடுவீடாக ஊசி: இதனிடையே, முகாமுக்கு வந்து டோக்கன் பெற்றுள்ளவர்களுக்கு தடுப்பூசி மருந்து வந்தவுடன் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

முகாமுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து மருந்து இல்லாமல் மக்கள் திரும்பியதோடு, சில இடங்களில் முகாம் ஏற்பாட்டாளர்களிடம் பிரச்னையிலும் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com