திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி வருவாய்த்துறை அலுவலர் பலி
திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் குளித்த வருவாய்த்துறை அலுவலர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.


திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் குளித்த வருவாய்த்துறை அலுவலர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). வருவாய்த்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். திருச்சி வந்த இவர், திங்கள்கிழமை காலை திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்குயில் குளிக்கச் சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...