கீழடியை உலகுக்கு அறிவித்த அமர்நாத் ராமகிருஷ்ணன்: தமிழகம் திரும்புகிறார்

தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட பணிகளால் கீழடியில் தமிழரின் தொன்மங்கள் வெளிவரத்தொடங்கிய நிலையில், அரசியல் சிக்கல்களால் அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் கோவாவிலிருந்து மீண்டும் தமிழகம் திரும்புகிறார். 
    
சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  இது தொடர்பான முழு அறிக்கையை தயாரிக்கும் சூழலில் அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். 

இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதன் வழக்கு விசாரணையில் மத்திய தொல்லியல் துறை 7 பக்க ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. 

அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, அமர்நாத் ராமகிருஷ்ணனையே முழு அறிக்கையையும் தயாரிக்க அறிவுறுத்தி ஏழு அவகாசம் அளித்து கெடு விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து கோவாவிலிருந்து அவர் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பவுள்ளார். இது தமிழ் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com