அண்ணா பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 
பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.
பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் சையதுகான் உள்ளிட்டோரும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

தேனியில் உள்ள அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 
அண்ணாவின் திருவுருவப் படத்திற்கும் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பொன்னையன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com