சேலத்தில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம்: கே.என்.நேரு தொடக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை அனைத்து மாநகராட்சி மற்றும் நகரப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் மூலம் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாநகராட்சி சீலாவரி ஏரியில் இன்று 20.09.2021 மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாமினையும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார். மேலும், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 71 இடங்களில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் மரம் நடும் திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில் சேலம் வாய்க்கால் பட்டரை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மட்டும் 1000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தும் மக்களை தேடி மருத்துவம் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் மற்றும் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும், மழைநீர் கால்வாய்களுடன் கலயது தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்டாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்” அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை பயன்படுத்தி இப்பணியானது துரிதமாக செயல்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை ஆறு பிரிவுகளாக பிரித்து ஆறு நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகளை பங்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை பெரு மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள் 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9097 இயயதிரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டும், 4,623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com